1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (16:36 IST)

தேவிகாபுரம் கோவில் திருவிழா பிரச்சனை: காவல்துறையினர் தடியடி

தேவிகாபுரம் என்ற பகுதியில் நடந்த கோவில் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேவிகாபுரம் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திய காவல்துறையினர்.இதனால் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதாகவும் பொதுமக்களில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த நிலையில் தேவிகாபுரத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது