1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி
விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள மூன்று கலசங்களை மர்ம நபர்கள் திருடி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது என்பதும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வழிபட வருவார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் திருட்டு போயுள்ளது.
 
1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்களும் 3 அடி உயரம் உடையவை என செய்திகள் வெளியாகியுள்ளன. விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்டுள்ள துகுறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.