1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. plus two students killed his own mother in chennai

பிளஸ் டூ தேர்வில் தோல்வி!.. கண்டித்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!.. சென்னையில் அதிர்ச்சி...

murder
இப்போதுள்ள இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு தாய்ப்பாசம், சென்டிமென்ட், பொறுமை, சகிப்புத்தன்மை, வாழ்வின் மீதான நம்பிக்கை ஆகியவை குறைந்துகொண்டே வருகிறது. எதுவாக இருந்தாலும் உடனே நடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அதேபோல் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்..

முக்கியமாக தாய், தந்தை தன்னை கண்டித்தால் அதை அவர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் அது கொலையில் கூட முடிந்து விடுகிறது
. அந்த வகையில்தான் சென்னை பெருங்குடியில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த தாயை அவரின் 19 வயது மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..

சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ்(19). இவர் பிளஸ் டூ தேர்வில் தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார். இதை அவரின் தாய் கண்டித்துள்ளார். இதையடுத்து அவரின் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்திருக்கிறார்.

அவரின் தந்தை வெளியே சென்ற நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ராகேஷ் கடந்த சில மாதங்களாகவே மனநிலை பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெருங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராகேஷ் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More