தொடர்புடைய செய்திகள்
- விஜய்யின் ஜனநாயகன்.. படம் வெளியாகும் முன்னரே 7.37 கோடி ரூபாய் வசூல்...
- முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!
- காமராஜர் ஆட்சிக்கு பின் விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை: ப சிதம்பரம்
- சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு ஏன் தேசிய விருது இல்லை: கலா மாஸ்டர் தகவல்..
- வெளியில் இருந்து மட்டுமே தவெக ஆட்சிக்கு ஆதரவு.. இடதுசாரிகள் மீண்டும் உறுதி...
விஜய் காலடியில் வைகோ; குத்தகைக்கு விடப்பட்ட தேமுதிக: நாஞ்சில் சம்பத் பேச்சு
விழுப்புரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் மிகக் கடுமையாகச் பேசியுள்ளார். மேடையில் தனது பாணியில் ஆவேசமாகப் பேசிய அவர், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கப் போவது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டுமே என்றும், மற்றக் கட்சிகள் அனைத்தும் சுயமரியாதையை இழந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதாகக் கூறி மதிமுகவைத் தொடங்கிய வைகோ, இன்று தனது கொள்கைகளை எல்லாம் மறந்து தவெக தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடப்பதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து மூப்பனாரால் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இன்று முகவரி இழந்து கல்லறைக்குள் போய்விட்டது என்றும் கூறினார். மேலும், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகவை, அவரது மனைவி பிரேமலதா அப்படியே திமுகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டதாகவும் கூறினார்.
அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தைத் தருவதாகக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசனையும் இன்று தனது 'டார்ச் லைட்டை' அறிவாலயத்தில் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் இனி தவெக தலைவர் விஜய்யின் தலைமையிலான புதிய அரசியலையே ஆதரிப்பார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
