1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (08:02 IST)

250வது நாள் சாதனை செய்த பெட்ரோல், டீசல் விலை: எப்போது குறையும்?

Petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 249 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 250 வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே அடைந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வரை பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் 250 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva