தொடர்புடைய செய்திகள்
- ‘வணக்கம் சென்னை’… தாய்வீட்டுக்கு வந்த ஜடேஜா!
- அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை
- எடப்பாடி பழனிசாமி தரப்பின் முக்கிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
- என்னைப் பொதுவெளியில் அவமதிக்க உங்களுக்கு அனுமதி இல்லை… இயக்குனர் அல்போன்ஸின் ஆதங்கம்
- தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5355.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 256 உயர்ந்து ரூபாய் 42840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5717.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
