1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 26 ஜனவரி 2023 (07:57 IST)

நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்: கவர்னர் ரவி குடியரசு தின வாழ்த்து!

Governor
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது:
 
நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்; பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது
 
வ.உ. சிதம்பரம், மகாகவி சுப்பிரமணிய பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன்,  ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம் - ஆளுநர் ரவி
 
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்த பிரச்சனையை அடுத்து இன்று ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் தேநீர் விருந்தில் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva