ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் திடீர் உயர்வு! – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
இந்தியா முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு சேவையான ஏர்டெல் தற்போது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் சேவை நிறுவனங்களில் ஏர்டெல் முக்கியமானதாக உள்ளது. 4ஜியை தொடர்ந்து நாடு முழுவதும் 5ஜி சேவைக்கான பணிகளையும் ஏர்டெல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அடிப்படை ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியுள்ளது.
முன்னதாக ஏர்டெலின் அடிப்படை ரீசார்ஜ் விலை ரூ.99 ஆக இருந்தது. 200 MB மொபைல் டேட்டா, லோக்கள் மற்றும் இந்திய அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இந்த ப்ளான் இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த ப்ளானை நிறுத்தியுள்ள ஏர்டெல் தொடக்க ப்ளான ரூ.155 ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ், அன்லிமிடென் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹலோட்யூன் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. வின்க் ம்யூசிக் சந்தாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே.
தற்போது நாட்டில் 7 டெலிகாம் வட்டாரங்களில் இந்த புதிய ப்ளான் அமலுக்கு வந்துள்ளதாகவும், குறைந்த விலை சலுகையை நிறுத்திவிட்டு, தொடக்க நிலை சிறந்த சேவையை வழங்கவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K