தொடர்புடைய செய்திகள்
- என் மகன போல ஒருத்தன் இங்கிலிஷ் பேசுவானா? துரைமுருகன் சவால்
- எனது மகனை மக்களுக்குத் தத்துக்கொடுக்கிறேன் – துரைமுருகன் உருக்கம் !
- பொள்ளாச்சி பயங்கரம் ; அதிமுக அரசை எப்படி நம்புவது ?- வேல்முருகன் கேள்வி
- திமுகவில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
- தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ : அன்று நண்பன் இன்று ?
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்!
தேர்தலின் போது வேட்பாளரை அறிவிப்பது, பின்னர் காரணமே இல்லாமல் வேட்பாளரை மாற்றுவது என்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அந்த வகையில் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி தற்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றியது
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அதில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் தற்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் முருகனுக்கு பதில் மயில்வேல் என்பவர் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வேட்பாளர் மாற்றத்திற்கு அதிமுக தலைமை காரணம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், முருகன் ஒரு அரசு ஊழியர் என்றும், தேர்தலில் போட்டியிடும் முன் அரசுவேலையை ராஜினாமா செய்ய அவர் தயங்கியதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்
