1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2019 (16:34 IST)

தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ : அன்று நண்பன் இன்று ?

துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால்  தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன்  தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது.

ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளனர். துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.  அதையடுத்து மாறி மாறி துரைமுருகனும் சுதீஷும் குற்றச்சாட்டுகளை வைக்க தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  காலையில் அவரது  இல்லத்திற்கு முன் வந்த தேமுதிகவினர் வீட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
 
இதனையடுத்து இந்த முற்றுகை போராட்டத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தேமுதிகவினர் விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம். அதற்காக நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டோம். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது கடும் கண்ணடனத்துக்குரியது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.