வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (11:05 IST)

5 மைல் தூரத்தில் வாக்குச்சாவடி – தேர்தலைப் புறக்கணிக்கும் சிவகங்கை கிராம மக்கள் !

தங்கள் ஊரில் இருந்த வாக்குச்சாவடியை 5 மைல் தூரத்தில் தள்ளி வைத்துள்ளதால் தேர்தலை புறக்கணிக்க சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி தெக்கூர்  மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டமத்தில் உள்ள பெரியகோட்டை எனும் ஊராட்சியில் உள்ள தெக்கூர் எனும் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அந்த வாக்காளர்கள் அதேப் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். ஆனால் 2016 ஆம ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திடீரென வாக்குச்சாவடியை சீரம்பட்டி எனும் பகுதிக்கு மாற்றியது தேர்தல் ஆணையம். இது பெரியக் கோட்டையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அதனால் வாக்காளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே வாக்குச்சாவடியை மீண்டும் பெரியக்கோட்டைக்கே மாற்றவேண்டும் என போராடி வந்தனர்.

இப்போது மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மனுக்கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த முடிவை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை மாற்றும் முயற்சியில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.