1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mdmk vaiko comment about josep vijay on pm

விஜய்க்கு அந்த எண்ணமே இல்ல!.. கம்முன்னு இருங்க!.. வைகோ கருத்து...

prime miniser
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிவிட்டார். மற்ற அரசியல் தலைவர்கள் போல மற்ற கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என செயல்பட்டு வருகிறார் முதல்வர் விஜய்..

மேலும், திமுகவை போல ஒன்றிய அரசிடமும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இணக்கமாக சென்று தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெறும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஒருபக்கம் விஜய் பிரதமர் ஆவார் என அவரின் ஆஸ்தான ஜோதிடர் சமீபத்தில் கூறினார்.

அதேபோல் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ் தெரிந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என கூறினார். மேலும், சில தவெக எம்.எல்.ஏக்கள் எங்கள் தளபதி விஜய் பிரதமராக வருவார் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது காங்கிரஸினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்ந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘பிரதமராக வேண்டும் என்ற எண்ணமும், நோக்கமும் முதல்வர் விஜய்க்கு துளியளவும் இல்லை.. அவரின் கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் அமைச்சர்கள் நினைத்து படி பேசக்கூடாது.. இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்.. எனவே இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டிக்கெட் புக் பண்ணா போதும்!.. அரசு பேருந்து வீட்டுக்கே வரும்!.. ஆந்திராவில் அறிமுகம்!...