1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sweets price are increased because of sugar price

சர்க்கரை விலை உயர்வு!.. விலை உயரும் ஸ்வீட்ஸ்!.. பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி...

sugar
பக்கத்து மாநிலங்களில் கரும்பு உற்பத்தி குறைந்திருப்பதாலும். எத்தனால் தயாரிப்புக்கு கரும்பை அதிக அளவு பயன்படுத்துவதாலும் சக்கரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் காரணமாக சர்க்கரை விலை சமீபத்தில் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ சர்க்கரை 47க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 70 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது இதன் காரணமாக சர்க்கரையை பயன்படுத்தி விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது..

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருப்பதால் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் நிலையில் சர்க்கரையின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சர்க்கரை விலை உயர்வு காரணமாக ஸ்வீட் கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் சர்க்கரை விலை அதிகரிப்பு காரணமாக விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ பால்கோவா ரூ.360 விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 400ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரு கிலோ பால் அல்வா 400லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் பிரதமரா?.. இது செம காமெடி!.. டிடிவி தினகரன் நக்கல்....