தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல!.. தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்!...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. எனவே இந்த 5 மாநிலங்களிலும் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடமும், அரசியல் விமர்சகர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த மாநிலங்களிலும் வருகிற மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்படவிருக்கிறது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவிருக்கிறது. முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்பட்டு அதன் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்று முடிவையும் உடனே வெளியிடுவோம் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்குகள்? எந்த கட்சி முன்னிலையில் இருக்கிறது? என்கிற தகவலை தொலைக்காட்சியை செய்தி சேனலில் ஒளிபரப்புவார்கள்.
எனவே அனைவரும் டிவியின் முன்பு அமர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி வீட்டில் இல்லாதவர்களும், பயணத்தில் இருப்பவர்களும் கூட தேர்தல் முடிவை உடனுடனே தெரிந்து கொள்ளும்படியாக தேர்தல் ஆணையம் ஒரு புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அதாவது தேர்தல் ஆணையத்தில் results.eci.gov.in என்ற இணையதளத்திலும் ECINET என்ற செல்போன் ஆப்பிலும் வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது..