1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mamata's Strongroom Vigil and EVM Tampering Allegations Stir High-Voltage Drama in West Bengal

சீல் வைக்கப்பட்ட EVM அறையில் 4 மணி நேரம் இருந்த மம்தா பானர்ஜி.. என்ன செய்தார்?

மேற்கு வங்கத் தேர்தல் 2026
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொல்கத்தாவின் பவானிபூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மழையையும் பொருட்படுத்தாமல் சென்ற மம்தா, அங்கு சுமார் நான்கு மணி நேரம் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார்.
 
பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குப்பெட்டிகளை தங்களுக்கு தெரியாமல் கையாளுவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி, இது பட்டப்பகலில் நடக்கும் ஜனநாயக படுகொலை என்று சாடியுள்ளது. நேதாஜி உட்புற விளையாட்டு அரங்கிற்கு வெளியே அமைச்சர்கள் சசி பஞ்சா மற்றும் குணால் கோஷ் தலைமையில் அக்கட்சியினர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
 
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வேட்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 
 
இதற்கிடையில், பெரும்பாலான எக்சிட் போல் கணிப்புகள் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்துள்ளன. இந்த சூழலில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப Cognizant முடிவு.. AI தொழில்நுட்பத்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ?