1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. employes given life jacked before the accident

படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் லைப் ஜாக்கெட் கொடுத்தாங்க!.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!...

japalpur
சமீபத்தில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் சுற்றுலா படகு கவிழ்ந்து 9 பேர் இறந்து போன சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதிலும் தனது மகனை கட்டியணைத்துக் கொண்டு ஒரு தாய் இறந்து போன புகைப்படம் வெளியாகி பலரையும் உலுக்கியது. விபத்தில் மரணமடைந்த குடும்பத்திற்கும் 2 லட்சம் இழப்பீடு கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்நிலையில்தான் இந்த சம்பவம் தொடர்பாக பல உண்மைகள் தற்போது வெளியே வந்திருக்கிறது..

விபத்து நடப்பதற்கு முன் கடலில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுக்கும் வீடியோ இன்று காலை வெளியானது. அப்போது காற்று பலமாக வீசுவது வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அதாவது மக்கள் உற்சாகமாக இருந்தபோது பலத்த காற்றுடன் வானிலை மோசம் அடைந்துள்ளது.. அப்போது யாருமே அங்கு உயிர்கவசம் (Life Jacket) கவசங்களை அணிந்திருக்கவில்லை. அது வீடியோவில் பதிவாகியிருக்கிறது..

japalpur

விபத்து நேர்வதற்கு சில நிமிடத்திற்கு முன்பே அங்கிருந்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை (Life Jacket)  ஊழியர்கள் கொடுத்துள்ளனர். அதனால்தான் 25 பேர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். ஆனால், முன்பே கொடுத்திருந்தால் 9 பேர் உயிரிழந்ததை முழுமையாக தவிர்த்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. தற்போது 9 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா தளங்களில் நாம் காட்டும் ஒரு நிமிட அலட்சியம் வாழ்நாள் தூயமாக மாறிவிடும் என்பதற்கு ஜபல்பூர் சம்பவம் ஒரு சாட்சியாக நிற்கிறது..
அடுத்த கட்டுரையில்
தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல!.. தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்!...