1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actress Gautami Officially Resigns from ADMK to Focus on Social Service

இனிமேல் அரசியலே வேண்டாம்.. அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி...!

நடிகை கௌதமி
பிரபல திரைப்பட நடிகை கௌதமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "கழக அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன். தற்போதுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டும், நான் மக்கள் பணியாற்றுவதற்கும், சமூக சேவை செய்வதற்கும் ஏதுவான வகையில் மிகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்து என்னை விடுவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் தனது அறிக்கையில், "நான் கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட, வட்ட, பகுதி, ஒன்றிய மற்றும் பேரூர் நகரக் கழக செயலாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கௌதமி குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த திடீர் விலகல் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய் பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்’.. தவெகவினரை கோபப்படுத்திய லதா ரஜினிகாந்த்..