தொடர்புடைய செய்திகள்
- திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!
- திமுக ஆட்சியின் அவலங்களில் ஒன்று.. முதலைமச்சர் சம்பளம் : ரூ.2,05,000.. Factcheck head சம்பளம் : ரூ.3,00,000.. ட்விட்டரில் பரவும் தகவல் உண்மையா?
- பராமரிக்கப்படாத அம்மா உணவகங்கள் என்றால் அது திமுக ஆட்சி.. கியூவில் நின்று பொதுமக்கள் உணவு உண்டால் அது தவெக ஆட்சி...
- திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..
- திமுக தோல்வி!. மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்!....
ரெட் ஜெயண்ட்ல்ல இருந்து மாசத்துக்கு 4 படம் வருமே.. இந்த மாசம் ஏன் வரல்ல.. ஏன்னா இது தவெக ஆட்சி: ஆதவ் அர்ஜூனா
திமுக ஆட்சியில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாராவாரம் படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த நான்கு வாரங்களாக இந்த நிறுவனம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
திரைத்துறையில் நிலவி வந்த மறைமுக ஏகபோக ஆதிக்கத்திற்கு தற்போதைய அரசியல் சூழல் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "இனிமேல் யாரையும் மிரட்ட முடியாது, மிரட்டி படங்களை வாங்கவோ அல்லது தியேட்டர்களை கட்டுப்படுத்தவோ முடியாது" என்று ஆவேசமாக தெரிவித்தார். அதிகார பலத்தை பயன்படுத்தி சினிமா தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் அச்சுறுத்தும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவரது பேச்சு அமைந்திருந்தது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடி விமர்சனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி மற்றும் திரைத்துறை ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, வரும் நாட்களில் பெரும் விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
