1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pallikalvithurai order to Matriculations follow reservation method

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இடஒதுக்கீடு கட்டாயம்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Pallikalvithurai
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை போல மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவில் 31%, SC – 18%, ST – 1%, MBC – 20%, BCM – 3.5%, BC – 26.5% ஆகிய விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்!