செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (09:02 IST)

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்!

Gun
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு காலாவதி ஆன நிலையில் இந்த சட்டத்தை மீண்டும் இயற்ற அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை முடிவு செய்தது
 
இந்த நிலையில் இன்று அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது