செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (11:11 IST)

மருத்துவ மேற்படிப்பில் சிறப்பு கலந்தாய்வு; வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

மருத்துவ மேற்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு 1456 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த காலி இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.