தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்!
2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் தீபாவளி வருவதால் இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி (திங்கள் கிழமை) வருவதால் முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்படுவர்.
எனவே அக்டோபர் 21 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அதன்படி தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்.
மேலும், அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24 ஆம் தேதியும், அக்டோபர் 23 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 25 ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.