தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவதா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
- இன்றைய போட்டி ஐசிசி நடத்திய போட்டிபோல் இல்லை- பாகிஸ்தான் அணியின் இயக்குனர்
- உலகக் கோப்பை 2023: இந்திய அணி சூப்பர் வெற்றி
- உலகக் கோப்பை 2023: இந்திய அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றி இலக்கு இதுதான்....
- முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்… சிராஜ் அற்புதம்!
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் விமானம்.. தீவிரவாத செயலுக்கு திட்டமா?
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான பெரோஸ்பூர் என்ற மாவட்டத்தில் நெல் வயலில் இருந்து பாகிஸ்தானின் விமானத்தை கண்டுபிடித்து உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்
இந்த ட்ரோனில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமிர்தசரஸ் பகுதியில் இதே போன்ற பாகிஸ்தான் ட்ரோன் விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மேலும் ஒரு ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ட்ரோன் விமானத்தை வைத்து இந்தியாவில் தீவிரவாத செயல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
