திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (11:54 IST)

ஜெய்ஸ்ரீ கோஷம் போட்டதால் பாகிஸ்தானை அவமதித்ததாக கருத முடியாது: அண்ணாமலை..!

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் போட்டதால் பாகிஸ்தானை அவமானப்படுத்தியதாக ஆகாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும் போது அந்த அணிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் சரி, ஹைதராபாத்தில் சரி பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 
 
அகமதாபாத் மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் விட்டதால் பாகிஸ்தான் அணிக்கே அவமரியாதை என்று கூற முடியாது.  இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது சில ரசிகர்களுக்கு எமோஷனல் இருக்கத்தான் செய்யும். அந்த எமோஷனனை வைத்து ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் அவமானப்படுத்தினார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 
Edited by Siva