ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (21:14 IST)

உலகக் கோப்பை 2023: இந்திய அணி சூப்பர் வெற்றி

india vs pakistan
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில்  உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சார்பில், சபிக் 20 ரன்னும், இமாம் உல் ஹஹ் 36 ரன்னும், பாபர் அசாம் 50ரன்னும், ரிஸ்வான் 49 ரன்னும் அடித்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா சார்பில், பும்ரா, சிராஜ், பாண்ட்யா, யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

எனவே இந்தியா 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

இதில், ரோஹித் சர்மா, 86 ரன்னும், ஸ்ரேயாஷ் அய்யர் 53 ரன்னும், கே.எல்.ராகுல் 19 ரன்னும் அடித்தனர்.

இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 3.03 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், அஃபிரிடி 2 விக்கெடும், ஹாசல் அலி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.