வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (21:18 IST)

இன்றைய போட்டி ஐசிசி நடத்திய போட்டிபோல் இல்லை- பாகிஸ்தான் அணியின் இயக்குனர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில்  உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

இன்றைய போட்டியில்,  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சார்பில், சபிக் 20 ரன்னும், இமாம் உல் ஹஹ் 36 ரன்னும், பாபர் அசாம் 50ரன்னும், ரிஸ்வான் 49 ரன்னும் அடித்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா சார்பில், பும்ரா, சிராஜ், பாண்ட்யா, யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

எனவே இந்தியா 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

இதில், ரோஹித் சர்மா, 86 ரன்னும், ஸ்ரேயாஷ் அய்யர் 53 ரன்னும், கே.எல்.ராகுல் 19 ரன்னும் அடித்தனர்.

இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 3.03 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், அஃபிரிடி 2 விக்கெடும், ஹாசல் அலி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இன்றைய போட்டி பற்றி பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:

இது ஐசிசி நடத்திய போட்டிபோல் இல்லை. பிசிசிஐ நடத்திய போட்டிபோல் இருந்தது.  மைதானத்தில் பாகிஸ்தானுகு ஆதரவான எந்த கோஷமும் அடிக்கடி வரவில்லை. நான் இதை காரணமாக கூறவில்லை என்று கூறியுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.