1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 14 அக்டோபர் 2023 (14:50 IST)

முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்… சிராஜ் அற்புதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்ய வந்த பாகிஸ்ஹான் அணி முதலில் விக்கெட்களை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. கிடைக்கும் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி வந்தது. முகமது சிராஜ் ஓவரில் அப்படி சில பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

இந்நிலையில் எட்டாவது ஓவரின் இறுதியில் சிராஜ் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக்கின் விக்கெட்டை எல் பி டபுள் யு முறையில் எடுத்தார். தற்போது பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.