1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. padmavathi thaayar temple in chennai

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய கோவில்.. குடமுழுக்கு விழாவில் குவிந்த பக்தர்கள்..!

சென்னை
சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய பத்மாவதி தாயார் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை அடுத்து சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானவர் திரண்டனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலை பக்தர்கள் மிகுந்த பய பக்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று பத்மாவதி தாயார் மற்றும் சீனிவாச சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது என்பதும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 19-ந் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி!