1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (16:33 IST)

மாணவர்களின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்

Chennai IIT
சென்னை ஐஐடியில் மாணவர்கள் அவ்வப்போது தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவர்களின் தற்கொலை அதிகரிப்புக்கு சென்னை ஐஐடி இயக்குனர் கூறிய போது கொரோனா காலத்தில் சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்து போனதே தற்கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை தடுப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளுக்கு சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த தற்கொலைகளால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்த ஐஐடி இயக்குனர் நாட்டில் பூஜ்ஜிய தற்கொலை என்பது எங்கள் இலக்கு என்றும் கொரோனா காலத்தில் சமூகத்துடன் ஒன்றி வாழ்வது குறைந்து போனதுதான் தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
 
கல்வி தொடர்புடைய அழுத்தம், குடும்ப விவகாரம், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மனநல விவகாரங்கள் ஆகியவை மாணவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva