வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (07:59 IST)

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது என்பதும் தமிழக முழுவதும் வறண்ட வானிலேயே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில்  விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva