கோவை சிறையிலிருந்து தப்பி சென்ற கைதி - இதுக்கு ஒரு எண்டே இல்லயா சார்!..
சமீபத்தில் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் சிறை காவலரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் காவல்துறைக்கு களங்கமாக அமைந்தது. 10 காவல்துறை அதிகரிகள் பணியில் இருக்கவேண்டிய நேரத்தில் 4 பேர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது. தப்பிச்சென்ற கைதிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 14 கைதிகளை காவல்துறை அதிகாரிகள் பிடித்தனர். 3 பேர் நீதிமன்றத்தில் வந்து சரணடைந்தனர்.
தற்போது அவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். ஒருபக்கம் தேனி சிறையில் 17 கைகள் தப்பிய விவகாரத்தில் இதுவரை 10 சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மற்றொரு சிறைக்கதை தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை அன்னூர் காவல் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்டபோது சிறை வளாகத்திலிருந்தே தப்பி சென்றுவிட்டார். அவரை மீண்டும் பிடிக்கும் பணியில் கோவை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.