1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay warning will take action if prisioners escape

தேனி சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்!.. ஆக்சன் எடுப்பேன்.. கொந்தளித்த விஜய்

vijay
சமீபத்தில் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் சிறை காவலரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தனிப்படைகளை அமைத்து 14 பேரை போலீசார் 48 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்தனர். மீதி மூன்று பேர் அவர்களாகவே நீதிமன்றத்தில் வந்து சரணடைந்தனர்.

தற்போது அவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேனி சிறையில் 17 கைகள் தப்பிய விவகாரத்தில் சிறையில் பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைதிகள் தப்பிய விவகாரத்தில் ஏற்கனவே காவல்துறையை சேர்ந்த 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 10வதாக நாகேஸ்வரன் பணியிட நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதோடு சிறையில் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது.. பணியில் மெத்தனமாகவோ, கவனக் குறைவாகவோ செயல்பட்டால் கடும் நடுவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!