மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு
மின்வாரிய தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்திருக்கிறது. மின்வாரிய தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அதிகபட்சமாக அவர்களுக்கு ரூ.16,800 வரை கிடைக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கள உதவியாளர், பயிற்சி கள உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்கீட்டாளர் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்படும் எனவும் கேங்மேன், பகுதிநேர துப்புரவு பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதோடு, மாதச் சம்பளம் 21,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கும் போனஸ் உண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு மின் வாரிய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதோடு, மாதச் சம்பளம் 21,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கும் போனஸ் உண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு மின் வாரிய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

