ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (14:21 IST)

அடப்பாவமே... வயதான பாட்டிக்கு பாலியல் தொல்லை...கலிகாலம்!

நாட்டில் தற்போது அதிக அளவு பாலியம் தொல்லைகள் அதிகமாகிவருகிறது. சட்ட ரீதியாக சில குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தாலும் கூட இன்னும் பலர் வக்கிர புத்திக்கு ஆளாகி நாளும் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில் செங்குன்றம்  பகுதியில் வசித்துவரும் 72 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ஆம்! செங்குன்றம் பகுதியில் வசிப்பவர் மூதாட்டி (72). நேற்று இரவில் இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.  அப்போது அங்குள்ள பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியசாமி (43) என்பவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.
 
இதனால் மூதாட்டிக்கு உடல்நிலை பாதிக்கபட்டது. பின்னர் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
தற்போது ஆரோக்கிய சாமியை போலிஸார் தேடிவருகின்றனர். மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.