திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:16 IST)

ஹாட் வாட்டர் கிடைக்குமா? நடுவானில் விமான பணிப்பெண்னிடம் அத்து மீறிய பைலட்

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது விமான பைலட் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விமான பணிப்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் விமான நிறுவனக்களின் ஒன்று இண்டிகோ. இந்தியா முழுவதும் விமான சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 
 
அப்படி பெங்களூருவில் இருந்து அமிர்தரஸ், ஸ்ரீநகர் வழியாக டெல்லிக்கும் விமானத்தை கடந்த 16 ஆம் தேதி இயக்கியது. அந்த விமானத்தில் பயணித்த பணிப்பெண் ஒருவருக்கு பைலட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். 
அந்த பெண் கூறியதாவது, விமானி சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அதை எடுத்து சென்றேன், அப்போது சக விமானி அங்கு இல்லை. இதை பயன்படுத்திக்கொண்டு விமானி என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார். 
 
பின்னர் அமிர்தசரஸில் விமானம் நின்றதும் என்னிடம் போன் நம்பரை கேட்டார். மேலும், தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இதனை நான் சக விமான பணிபெண்களிடமும் இண்டிகோ நிறுவனத்திடமும் தெரிவித்துளேன். இருப்பினும் போலீஸில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.