உ.பி.யில் வரதட்சணை கொடூரம்: கணவன், மைத்துனனால் முதலிரவில் பெண் கற்பழிப்பு

VM| Last Modified ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:55 IST)
உத்திரபிரதேசத்தில்  வரதட்சணை பிரச்சனை காரணமாக முதலிரவின் போது கணவன் மற்றும் கணவனின் தம்பியால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி திருமணம் நடந்தது. அன்று இரவு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலிரவு அறையில் கணவன் மற்றும் கணவனின் தம்பியும் இளம்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்தனர்.  ரத்தப்போக்குடன்  கிடந்த அப்பெண்ணை காலையில் தான் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதி நடந்திருந்தாலும் தற்போதுதான் வெளியே தெரிந்துள்ளது. வரதட்சணை பிரச்சனை காரணமாக கணவனும் கணவனின் தம்பியும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதையடுத்து பெண்ணின் கணவன், மைத்துனன் மற்றும் குடும்பத்தினர் மீது  கூட்டு பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துதல், பெண்ணை  துன்புறுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :