ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (12:00 IST)

கள்ளக் காதலர்களுடன் குழந்தைக்கு பாலியல் தொல்லை : தாய் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் பெட்ரோல் பங்க் ஊழியராக உள்ளார். இவருக்கு மனைவியும் (23) மூன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். 
கடந்த 14 ஆம் தேதி இவரது மனைவி குழந்தையுடன் காணால் போனார். இதுகுறித்து கணவர் போலீஸுல் புகார் தெரிவிக்க காவக்துறை வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தாய் தன் மகளுடன் வீட்டிற்கு வந்தார். இது பற்றி போலீஸார் விசாரித்ததில் பல பகீர் விஷயங்கள் வெளியானது.
 
அதில், அப்பெண்ணிற்கு ஆந்திர மாநிலத்தில்  பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா, மணி ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் அவர்களுடன் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளார். அத்துடன் தன்  3 1/2 அரை வயது பெண்குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
இதனையடுத்து குழந்தைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்தனர்.
 
தற்போது கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தாயையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவா, மணி ஆகியோரை  போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.