புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (18:45 IST)

’அவர் தான் ’உண்மையான ஹீரோ - ஸ்ரீரெட்டி பெருமிதம்

கடந்த ஆண்டில் கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டம் நடத்தை பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்  தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி.  
தெலுங்கு திரையுலகில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகவே ஒரு குழு எற்படுத்தியுள்ள   தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு நன்றிதெரித்து  இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
 
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
 
ஹைதராபாத்தில் இருப்பதற்காக நாம் பெருமைப்படுவோம். உண்மையான ஹீரோவான உங்களுக்கு நன்றி சந்திரசேகரராவ்... எனது கனவு இன்று நிஜமாகிவிட்டது...நான் இன்று ஹீரோயினாகி விட்டேன். எனது ஒரு வருட வலியை நான் இன்று இறக்கிவைத்துவிட்டேன். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி சீக்கிரமாகச் செயல்பட வேண்டும்...இவ்வாறு இதில் பதிவிட்டுள்ளார்.