ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (08:10 IST)

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சர் ஆக பொறுப்பு ஏற்க இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் பதவி என்பது பதவி அல்ல, அது ஒரு பொறுப்பு என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதற்கு முன் முக ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக இருந்த நிலையில் மூன்றாவது துணை முதலமைச்சர் ஆக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர்
முக ஸ்டாலின்  அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.

அன்பும், நன்றியும்!

Edited by Siva