ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (05:08 IST)

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறைக்கும்,  சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி, மனிதவள மேம்பாட்டு துறைக்கும்,  வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், நிதித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மனோ தங்கராஜ், கே எஸ் மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்தே விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்கவுள்ளனர்.

அதே வேளையில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்திருக்கும் செந்தில் பாலாஜி மற்றும் கோவி செழியன், ராசேந்திரன், நாஸர் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.