டெல்லியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு: அரசு அதிகாரிகளுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்!
டெல்லியில் 100 சதவீத அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருவதால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதன் காரணமாக பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதனை அடுத்து அங்கு உள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு அலுவலர்களுக்கும் கிட்டத்தட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது
அரசு அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அணை அனைவருமே வீட்டில் இருந்து பணி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பொதுமக்கள் தேவை என்று வெளியே வரவேண்டாம் என்றும் டெல்லி மாநில அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மாசுகட்டுபாடு குறைந்த உடன் தான் பொதுமக்கள் வெளியே வருவது பாதுகாப்பானது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது