1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:33 IST)

டெல்லியில் ஒரு கொரோனா இழப்பு கூட இன்று இல்லை

டெல்லி மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 என்றும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒருவர் கூட இல்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 61 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் டெல்லியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 367 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டடு குணமானவர்களின் மொத்த என்ணிக்கை 14,14,812 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,40,270என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,091அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லி மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது