புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (10:57 IST)

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை!

டெல்லியில் காற்றுமாசு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் புதிய கட்டுப்பாடாக டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும், வாகனப்புகையும் காற்றுமாசுபாடுக்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் தனி வாகனம் வைத்துள்ளவர்களும் பொது போக்குவரத்தை நாடுவர் என கூறப்படுகிறது.