செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 அக்டோபர் 2021 (11:03 IST)

டெல்லி அணியில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தபோது காயத்திலிருந்து மீண்ட அவர் அணிக்கு வந்தார். ஆனால் அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்படவில்லை. பண்ட்டே கேப்டனாக தொடர்ந்தார். இது சம்மந்தமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அடுத்த ஏலத்தில் அவர் வேறு அணிக்கு மாற முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.