இது என் ரொம்ப நாள் கனவு!.. நெகிழ்ந்து பேசிய முதல்வர் விஜய்!...
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 127 கோடி செலவில் 164 டீசல் பேருந்துகள் பேருந்துகள் மற்றும் 136 சிஎன்ஜி பேருந்துகளும் சமீபத்தில் வாங்கப்பட்டது. அதன் சேவையை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அப்போது, தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பூருக்கு செல்லும் 29ஏ அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய் பெரம்பூர் வரை சென்று அதன்பின் மீண்டும் அதே பேருந்தில் தலைமைச் செயலகத்திற்கு திரும்பினார். அப்போது பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் அவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அதோடு பேருந்தில் செல்லும் போது தனது பயணத்தை அவர் செல்போனில் பதிவு செய்து கொண்டார். செல்லும் வழியில் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் அவர் கையசைத்தார்..
இந்நிலையில், முதல்வர் விஜய் பயணித்த பேருந்தின் நடத்தினர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த மாதிரி பேருந்துல பயணம் செய்யணும்னு எனது ரொம்ப நாள் கனவு என விஜய் சார் எங்கிட்ட சொன்னார்.. அவருக்கும் அவர் கூட வந்தவருக்கும் சேர்த்து 16 டிக்கெட்டுகள் வாங்கினார்.. எங்க எல்லாரையும் சந்தோசமா நல்லபடியா வேலை செய்யுங்கன்னு சொன்னார் என கூறியிருக்கிறார்.