1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nirmala sitaraman comment about tvk vijay

விஜய் யாருடைய ஒட்டுக்களை பிரிப்பார்!... நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேட்டி!..

tvk vijay
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்க துவங்கிவிட்டன. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பேசுவது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது என தேர்தல் பணிகள் சூடு பிடித்திருக்கிறது..

கடந்த 50 வருடங்களாகவே தமிழக அரசியல் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் மீதும்தான் பயணித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி என்கிற நிலையும் இருந்தது.. அதேநேரம் தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது.. அதற்கு முக்கிய காரணம் விஜய் ஒரு நட்சட்திர நடிகர் என்பதே.

ஒருபக்கம் மேடைகளில் பேசும் தவெக தலைவர் விஜய் ‘தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி’ என தொடர்ந்து சொல்லி வருகிறார். விஜய் தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகளை வாங்குவார் என்றெல்லாம் சிலர் கருத்து கணிப்பு சொல்லி வருகிறார்கள்...

இந்நிலையில், ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க மத்திய நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்.. ஆனால் அவர் யாருடைய வாக்குகளை அவர் பறிக்க போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.. தமிழக அரசியலில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. விஜய் திமுக வாக்குகளையும், பெண்களையும் தன் பக்கம் இழுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்..
About Writer
Mahendran