விஜய்க்கு ஜோசியம் சொன்ன பிரபல ஜோதிடர்!.. தவெக செம ஹேப்பி!....
திரையுலகில் நடிகராக இருந்து பலரும் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த். இடையில் சிவாஜி கணேசன், டி ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் உள்ளிட்ட சிலர் கட்சி துவங்கினாலும் மக்கள் அவர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை. எம்ஜிஆர் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அவரின் உடல்நிலை மோசமானதால் அது நடக்கவில்லை..
தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளையும் அவர் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.. 206 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், விஜய் 18 சதவீத வாக்குகளை வாங்குவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வருகிறார்கள்..
இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் தெரிய வந்திருக்கிறது.. விஜய்க்கு இப்போது ஜோதிட ஆலோசனைகளை சொல்வது ராதன் பண்டிட். இவர் திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளியை சேர்ந்தவர். பல வருடங்களுக்கு முன்பு இவர் கொங்கு மண்டல அதிமுக பிரமுகர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு ஜோதிட ஆலோசனைகளை சொன்னவர். அதேபோல் ஸ்டாலின் குடும்பத்திற்கும் இவர் ஜோதிடம் பார்த்திருக்கிறார்..
தற்போது விஜய்க்கு ஜோதிடம் பார்க்கும் ராதன் பண்டிட் மோடியை போல நீங்கள் நாடு முழுவதும் புகழ் பெறுவீர்கள்.. அந்த யோகம் உங்களுக்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மேலும் கடக ராசியை சேர்ந்த உங்களுக்கு நீச பங்கு ராஜயோகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதேபோல் முதல்வர் முக ஸ்டாலினுக்கு மகா பாக்ய யோகம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மோடியை போல விஜய் நாடு முழுவதும் பிரபலமாவார் என ராதன் பண்டிட் சொல்லியிருப்பது தவெகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.