After All ஒரு நடிகன் நீ!.. விஜயை விமர்சிக்கும் தவாக வேல்முருகன்!..
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு மேடையில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று பேசினார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. விஜய் எப்படி முதல்வரை அங்கிள் என்று சொல்லலாம் என்றெல்லாம் அவர்கள் விஜய திட்டினார்கள்.. தற்போது முதல்வரை குறிப்பிட்டு பேசும்போது சிஎம் சார் என்று பேசுகிறார் விஜய். அதுவும் திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
ஆனாலும் விஜய் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஒரு மேடையில் பேசும்போது After All ஒரு சினிமா நடிகர் நீங்கள்.. முதல்வரை முதலைமைச்சர் சார்;, அங்கிள் என பேசுகிறீர்கள்.. என்ன நக்கல்? என்ன நையாண்டி?
தலைவர்களை விஜய் இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெண்களும் இளைஞர்களும் உங்கள் பாட்டுக்கு ஆடினால்.. விஜய்.. விஜய் என்று சொன்னால் உடனே உங்களுக்கு முதல்வர் ஆசை வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பேச்சு வேல்முருகன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் தவெகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா, உதயநிதி ஆகியோரை நீங்கள் After all ஒரு நடிகர்' என்று பேசுவீர்களா? அப்படி பேசும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்..