மெர்சல் படத்தை ரிலீஸ் பண்ணி கொடுத்தோம்!. நன்றி இல்லாதவர் விஜய்!.. கடம்பூர் ராஜூ கோபம்!...
நடிகர் விஜய் தவெக என்கிற அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து திமுகவை மட்டுமே மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார். ஈரோடு மாவட்டத்தில் பேசும்போது கோபத்தில் திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீயசக்தி என ஆவேசமாக பேசினார். மேலும் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது.. ஒருபக்கம் தற்போது அதிமுகவின் விமர்சிக்க துவங்கியிருக்கிறார் விஜய்..
அதிமுக ஒரு ஊழல் அடிமைக் கட்சி.. பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சி என்றெல்லாம் விமர்சித்தும், நக்கலடித்தும் வருகிறார். இதனால் இதுவரை விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த அதிமுகவினர் கூட அவரை திட்ட துவங்கிவிட்டனர். விஜய் வீட்டிலிருந்து கொண்டு ஏதேதோ பேசி வருகிறார். 41 பேர் உயிரிழந்தபோது நேரில் கூட சென்று பார்க்காத ஒரு அரசியல்வாதி என எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது விஜயின் மெர்சல் படம் பிரச்சனையில் சிக்கிய போது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிதான் அந்த பிரச்சினைக்கு இரவோடு இரவாக தீர்வு கண்டு படத்திற்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டார். அப்போது வாழ்நாள் முழுக்க நன்றிக் கடனோடு இருப்பேன் என விஜய் சொன்னார்.
அப்படி சொன்ன விஜய்தான் இப்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார்.. அதேநேரம், அதிமுக என்கிற பெயரை சொல்லவே அவர் பயப்படுகிறார் என்று பேசியிருக்கிறார்..