தொடர்புடைய செய்திகள்
- செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
- 3 நாட்கள் டாஸ்மாக் லீவ்.. மொத்தமாக சரக்கை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்! – ஒரு நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
- குடிதண்ணீர், டாஸ்மாக் தண்ணீர்.. ரெண்டு பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுவோம்: செளமியா மகள் பிரச்சாரம்..!
- நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், டாஸ்மாக்கை மூடுங்கள்: உதயநிதியிடம் பெண்கள் வாக்குவாதம்..!
- தினசரி டாஸ்மாக் வருமானம் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறதா? அதிமுக பகீர் புகார்..!
தமிழ்நாட்டில் அறிமுகமாகும் கோதுமை பீர்: விலை என்ன தெரியுமா?
தமிழகத்தில் ஏற்கனவே பல வகையான பீர்கள் டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை ஆக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோதுமை பீர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் மது கடைகளில் தற்போது 35 வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 100% கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பீர் 160 முதல் 170 ரூபாய் வரையில் விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
கோதுமையில் ஐந்து வகையான புதிய பீர்கள் தயார் செய்து விற்பனை செய்ய டாஸ்மார்க் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய வகை பீர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பீர்கள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ள நிலையில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், கோதுமை பீர் அறிமுகமானால் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
